search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹர்திக் பட்டேல் திருமணம்"

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு கைதாகி, சிறைசென்ற ஹர்திக் பட்டேல் தனது நீண்டநாள் தோழியை இன்று திருமணம் செய்து கொண்டார். #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் பட்டேல் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராடிவந்த ஹர்திக் பட்டேலை கடந்த 2016-ம் ஆண்டில் கைது செய்த போலீசார், அவர்மீது பிரிவினைவாதம் மற்றும் பொதுக்கூட்டங்களில் வாளை உயர்த்திக் காட்டி பொதுமக்களிடையே வன்முறைக்கு வித்திட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சுமார் ஒன்பது மாதங்களாக சூரத் மாவட்ட சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.

    தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் ஐகோர்ட்டில் ஹர்திக் பட்டேல் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது விசாரணை நடத்திய நீதிபதி 17-7-2016 அன்று அவரை ஜாமினில் விடுவித்து உத்தரவிட்டார்.

    விடுதலை ஆகும் தினத்திலிருந்து ஆறுமாத காலத்துக்கு குஜராத் மாநிலத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஹர்திக் பட்டேலை விடுதலை செய்வதாக தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் அவர் தங்கி இருந்தார். இந்த தடை உத்தரவு நேற்றுடன் முடிந்ததால் கடந்த ஆறுமாத காலமாக தாய்மண்ணை விட்டு பிரிந்திருந்த ஹர்திக் பட்டேல் 17-1-2017 அன்று குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்தார்.



    இந்நிலையில், தனது நீண்டநாள் தோழியான சட்டக்கல்லூரி மாணவி கின்ஜல் பரேக் என்பவருக்கும் ஹர்திக் பட்டேலுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலம், சுரேந்திராநகர் மாவட்டம், திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் கின்ஜல் பரேக் - ஹர்திக் பட்டேல் திருமணம் இன்று நடந்து முடிந்தது.

    முன்னதாக, இதே மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டம், உஞ்சா பகுதியில் உள்ள கடவா பட்டேல் இனத்தவர்களின் சிறப்புக்குரிய வழிப்பாட்டுத்தலத்தில் இந்த திருமணம் நடைபெற ஹர்திக் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ஆனால், மெஹ்சானா மாவட்டத்துக்குள் ஹர்திக் பட்டேல் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் , திக்சார் கிராமத்தில் உள்ள கோவிலில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் பிரமுகர்கள் யாருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை.  #PAASleader #HardikPatel #HardikPatelmarried
    ×